My Self On Social Media

My Social Media Profile

Jothida Kala Bhusan

Dr. Omsrikannaji

மனித வாழ்வில் அன்றாடம் பல பிரச்னைகளை மனிதர்கள் சந்திக்கிறார்கள். சில பிரச்சனைகளை நாமே தேடித் கொள்கிறோம். சில பிரச்சனைகள் நமக்கு தெரியாமலே நம்மை தேடி வருகிறது. இவ்வாறு நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள், கஷ்டங்கள் போன்றவை நீங்கி வாழ்வில் செழிப்புடனும் சிறப்புடனும் வழ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள், மகரிஷிகள் நமக்காக வழி முறைகளை சொல்லி வைத்து சென்றுள்ளனர். அவைகளில் ஜோதிடம், வைத்தியம், மாந்தீரீகம் மிக முக்கியமாகும். ஜோதிடம் என்பது ஒரு மனிதனை பற்றியும், அவன் எதிர்காலம் பற்றி அறிய பயன்படுகிறது. வைத்தியம் மனிதர்களுக்கு ஏற்படும் பிணி, நோய் போன்றவை நீங்க பயன்படுகிறது.

மாந்தீரீகம் என்பது நடக்காததை நடக்க செய்திடும், முடியாதவற்றை முடித்துவிடும். கிடைக்காததை கிடைக்க செய்திடும். மிகுந்த சக்தியும், அற்புத பலனும் கொண்டது மாந்தீரீகம் ஆகும். மாந்தீரீகத்தை நமது சித்தர்கள் எட்டு வகையாக பிரித்துள்ளனர்.

1. வசியம், 2. மோகனம், 3. தம்பனம், 4. உச்சாடனம், 5. ஆக்ருஷணம், 6. பேதனம், 7. வித்வேஷனம், 8. மாரணம் என்பதாகும்.

இதில் மனிதர்களுக்கு முக்கியமானது வசிய கலையாகும். வசியம் என்னும் கலையை சித்தர்கள் எட்டு உட்பிரிவாக பிரித்துள்ளனர். அவை"

1. ஜனவசியம், 2. ராஜவசியம், 3. புருஷவசியம், 4. ஸ்திரிவசியம், 5. மிருகவசியம், 6. தேவவசியம், 7. சத்ருவசியம், 8. லோகவசியம்.

வசியம் என்றால் சிலர் பிறரை மயக்கி அவரது உடமையையோ பொருளையோ பறிப்பது என்று நினைப்பார்கள். அது தவறான கருத்தாகும். நம்மிடம் இல்லாத சக்தியை தெய்வங்கள், தேவதைகள் மூலம் பெற்று வாழ்வில் செழிப்புடன் வாழ வழி வகுப்பதாகும். கிரகங்கள், பஞ்சபூதங்கள் , மந்திரம், யந்திரம், மூலிகை, ஜோதிடம், வைத்தியம், மாந்தீரீகம் போன்ற கலைக்கு சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி சாஸ்த்திரம் என்னும் மிக சக்தி வாய்ந்த பிரபஞ்ச விஞ்ஞான இயல் நிகழ்வு கலை மிக முக்கியமானது. உலகில் மிக சிலரே இக்கலையை கற்று மக்கள் நலத்திற்கு பயன்படுத்துகின்றனர். பஞ்சபட்சி சாஸ்திரத்தின் சிறப்பை சித்தர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

"பட்சி அறிந்தவனைப் பன்னி பகைத்து நிதம் கட்சி புரிவோர் கருந்தழிவர் பஞ்சபட்சி தன்னை பரிவாகப் பூஜை செய்தல் கஞ்சமலர் மாது தனைக் காணலாம் மிஞ்சிவரும் சத்ருவும் இல்லை தானவனாம் இப்புவியில் எத்திசையும் ஏற்றம் பெறும்".

என்று கூறுகின்றனர். இதன் பொருள் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கற்றவரையும், அதை பயன்படுத்துவோரையும் யாராவது பகைத்தல் கருந்தழிவர் (அழிவர்) என்றும், பஞ்சபட்சி பூஜையை முறையாக செய்தால் திருமகளின் செல்வத்தை அடைவதுடன் எவ்வித பகையும் இன்றி உலகில் எத்திசையிலும் வெற்றி காணலாம் என்று சித்தர் சத்தியம் செய்து கூறியுள்ளனர்.

ஒரு மனிதனின் பிறந்த நட்சத்திரம் அல்லது பெயரின் முதல் எழுத்தை கொண்டு அம்மனிதனின் பட்சி என்ன என்று அறிந்து அவருடைய வெற்றி தரும் நாள், கிழமை, நேரம் போன்றவை அறிவதுதான் அவருடைய தெய்வம், தேவதை, கிரகம், பஞ்சபூதம், மந்திரம், யந்திரம், மூலிகை போன்றவற்றை கண்டறிந்து மந்திர-யந்திர-ஒளஷத மஹாசக்தி பூஜா மூலம் ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஏற்படும் சகலவித பிரச்சனைகள், தடைகள், கஷ்ட நஷ்டங்களை நீக்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழலாம்.

பஞ்சபட்சி சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட ஜாதக படலம் மூலமாக ஒருவரின் எதிர்கால நிகழ்கால பலனை அறியலாம். வெற்றி தோல்வி படலம் மூலமாக நமது வெற்றி, தோல்வியை நிர்ணயித்து கொள்ளலாம். முடிசூட்டுப்படலம் மூலமாக திருமணம், காதல் விவகாரம் போன்றவை அறியலாம். மனைப்படலம் மூலமாக வீடு, மனை, சொத்து, சுகம் போன்றவை அறியலாம். பணிப் படலம் மூலமாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய், அதை நிவர்த்தி செய்வதற்கான வழி முறைகளை அறியலாம். மூலிகை படலம் மூலமாக மூலிகைகளை கொண்டு மருத்துவம், மாந்தீரீகம் மற்றும் சாகச கலைகளை செய்யலாம். ஆட்டகன்மப்படலாம் மூலமாக அஷ்ட கர்மம் என்னும் எட்டு வகை மாந்தீரீக கலையை கற்று சித்து பெறலாம். வாசியோக படலம் மூலம் சரம்பார்க்கும் கலையை கற்று, உலகில் எல்லாவற்றிலும் நினைத்தது போல் வெற்றி காணலாம். (சரகம் பார்ப்பவன் பரம் பார்ப்பான்). ஆருடப் படலம் மூலமாக குறி சொல்லுதல், ஆருடம் படலம், சிந்தனை படலம், ஞான படலம் போன்றவை மனித உயர்வுக்கும் மோட்ச நிலைக்கும் பயன்படுகிறது.

இத்தகைய கலைகளை வேண்டுமென்றால் முறையாக ஜோதிடம் மற்றும் மாந்தீரீக கலையை கற்றவரால் மட்டுமே முடியும். அந்த வகையில் பரமக்குடி சௌராஷ்ட்ரா பரம்பரையில் பிறந்த நான் பன்னிரண்டு வருடங்கள் இக்கலையை முறையாக கற்று 'ஸ்ரீபஞ்ச நவதேவதா ஜோதிட நிலையம்' என்னும் நிறுவனத்தின் மூலமாக மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், கஷ்டங்கள், தடைகள் போன்றவை நீங்கி வாழ்வில் நினைத்தவற்றை அடைந்து செழிப்பும், சிறப்புடனும் வாழ வழி வகுத்துள்ளோம்.